கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி


கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 Sep 2020 1:19 PM GMT (Updated: 26 Sep 2020 1:19 PM GMT)

கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

  • ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது
  • 130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்
  • மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது
  • ஐநா சபையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்திய மக்கள் நீண்ட காலமாக காத்துள்ளனர்.
  • கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது
  • ஐநா தொடங்கிய போது இருந்ததை விட தற்போதைய உலகம் முற்றிலும் மாறுபட்டது
  • இன்றைய சவால்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளன.
  •  ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது
  •  இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம்
  • ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது
  • *உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது
  • கடந்த 8 மாதங்களாக கொரோனா தொற்றால் உலகமே போராடி வருகிறது
  • தீவிரவாதம் என்பது உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது
  • உலக பொருளாதாரத்தை சீர்திருத்த வழிகள் இருக்கின்றன
  • நாங்கள் வலிமையாக இருந்தபோது உலகிற்கு எந்த சுமையும் தரவில்லை

Next Story