தேசிய செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி + "||" + Lesbian couple seeking police protection against parental opposition

பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி

பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி
நானின்றி நீயில்லை, நீயின்றி நானில்லை என்கிற அளவில் இருவரும் தங்களது லெஸ்பியன் காதலை பலப்படுத்தி கொண்டனர்.
லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த 22 மற்றும் 23 பெண்கள் இருவருக்கு இடையே காதல் மலர்ந்தது.

நானின்றி நீயில்லை, நீயின்றி நானில்லை என்கிற அளவில் இருவரும் தங்களது லெஸ்பியன் காதலை பலப்படுத்தி கொண்டனர்.

இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இந்த நிலையில், இந்த லெஸ்பியன் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவரவே சிக்கல் உண்டானது. அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி உள்ளனர்.

ஆனால் ஒருவரையொருவர் பிரிய மனமில்லாத அந்த காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உள்ளனர்.