வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது: 'மன்-கீ-பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு


வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது: மன்-கீ-பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2020 7:08 AM GMT (Updated: 27 Sep 2020 7:08 AM GMT)

வில்லுப்பாட்டு முறை தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது என்று 'மன்-கீ-பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். 

அதன்படி, 69வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இன்று காலை 11 மணி அளவில் ஒலிபரப்பான இந்த நிகழ்சியில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பெண்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அபோது பேசிய அவர், “ஒவ்வொருவரின் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டம் குறித்த விஷயங்களை, குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.  

தமிழகத்தில் இசையுடன் கதை சொல்லும் வில்லுப்பாட்டு முறை மிகவும் பிரசித்தி பெற்றது. வில்லுப்பாட்டின் மூலம் புராண கதைகள் சொல்லும் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது” என்று தெரிவித்தார். 

Next Story