தேசிய செய்திகள்

இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் + "||" + 10 states, UTs account for 75 per cent of all new coronavirus cases in India: Health Ministry

இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் 10 மாநிலங்களில் இருந்து 75% கொரோனா தொற்றுகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் 75 சதவீத புதிய கொரோனா தொற்றுகள் 10 மாநிலங்களில் இருந்து மட்டும் கண்டறியப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று கூறியிருப்பதாவது:-

''இந்தியாவில் தற்போது ஒருநாளில் 85,362 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில்  75 சதவீத கொரோனா தொற்றுகள் 10 மாநிலங்களில் இருந்து மட்டும் கண்டறியப்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் 10 மாநில பட்டியலில் மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஒடிசா, டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மராட்டியத்தில் தினந்தோறும் 17 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளோடு தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிற்து. கர்நாடகாவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளும் ஆந்திராவில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகளும் பதிவு செய்யப்படுகின்றன.

ஒரு நாளில் ஏற்பட்ட 1,089 இறப்புகளில் 83 சதவீத உயிரிழப்பு, மராட்டியம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏற்பட்டுள்ளன. மராட்டியத்தில் 24 மணி நேரத்தில் 416 இறப்புகள் பதிவாகி உள்ளன. கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முறையே 86 மற்றும் 84 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியா தன்னுடைய பரிசோதனைக் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 1,086 அரசு ஆய்வகங்கள் 737 தனியார் பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 1,823 ஆய்வகங்கள் உள்ளன. இதனால் தினந்தோறும் 14 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா, சீனா எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை - அமெரிக்கா அறிவிப்பு
இந்தியா, சீனா இடையேயான எல்லை மோதல்கள் அதிகரிப்பதை விரும்பவில்லை என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது.
2. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 70 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
3. இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் சாவு - ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,366- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனா பரிசோதனை 10 கோடியை தாண்டியது- ஐசிஎம்ஆர் தகவல்
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது.