குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்


குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா? ; ஐசிஎம்ஆர் ஆய்வு செய்வதாக மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 27 Sep 2020 2:41 PM GMT (Updated: 27 Sep 2020 3:07 PM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 60 லட்சத்தை நெருங்கியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  ஆன்லைன் மூலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - “ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் ) நடத்திய  2-வது கட்ட சீரோ சர்வேயின் படி, இந்திய மக்கள் தொகையில் கொரோனாவுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தி ஏற்படுவது மிக தொலைவில் இருப்பது தெரிகிறது. எனவே, கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். 

கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி, ரெம்டெசிவர் சிகிச்சை ஊக்கப்படுத்தப்படாது. அவற்றின் பயன்பாடுகள் குறித்து அரசு தொடர்ச்சியாக வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டு வருகிறது.  இந்த விசாரணை சிகிச்சை முறைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு எதிராக தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. எனினும்,  கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது” என்றார்.

Next Story