தேசிய செய்திகள்

டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் + "||" + Bird hit forces Delhi-bound Indigo flight to return to Mumbai

டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்
மும்பையிலிருந்து தலைநகர் டெல்லி சென்ற இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி,

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.05 மணியளவில்  இண்டிகோ விமானம் பயணிகளுடன் தலைநகர் டெல்லி நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியது.

இதனால், விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்திற்கே திருப்பப் பட்டு மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தை உடனடியாக ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆகஸ்ட் 8-ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மீதும் பறவை மோதியதால், விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பியது. பயணிகள் மாற்று விமானத்தில் மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


தொடர்புடைய செய்திகள்

1. கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்
மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
2. கங்கனாவை ஆதரிப்பது துரதிஷ்டவசமானது - பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்துக்கு பா.ஜ.க ஆதரவளிப்பது துரதிஷ்டவசமானது என சிவசேனா கூறியிருக்கிறது.
3. "மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" - கங்கனா ரனாவத் சவால்
9 ந் தேதி மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்" என்று கங்கனா ரனாவத் சவால் விடுத்து உள்ளார்.
4. மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு; 15 நாட்களில் 20 சதவீதம் அதிகரிப்பு
மும்பையில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது பதினைந்து நாட்களில் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
5. மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்குப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.