வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்- காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்- காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Sep 2020 2:36 PM GMT (Updated: 28 Sep 2020 2:36 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங். ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா காந்தி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  நாட்டின் பல பகுதிகளில் இன்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு. அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குகிறது. இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் மாநில முதல் மந்திரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார்.

Next Story