இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்


இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் மழை பெய்துள்ளது - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 28 Sep 2020 3:45 PM GMT (Updated: 28 Sep 2020 3:45 PM GMT)

இந்தியாவில் இயல்பை விட 9 சதவீதம் அதிகமான மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடில்லி, 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்தியாவின் பல மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதிகரிக்கும் கனமழையால் நாட்டின் முக்கிய நதிகள் , நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளில் தண்ணீரின் அளவு உயர்ந்து கொண்டிருக்கிறது. 

மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்பின் பல்வேறு இடங்களில், பருவமழை விலகி செல்கிறது. பீஹாரின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, அடுத்த 2 முதல் 3 நாட்களில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டில்லி உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 

தீபகற்ப இந்தியாவின் தெற்கு பகுதியில், அடுத்த 3 நாட்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அடுதத 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். செப்.,29 அன்று ராயலசீமா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

அடுத்த 5 நாட்களில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை அதிகமாக இருக்கும். அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு தீபகற்ப இந்தியா, மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். செப்.,27 வரை இந்தியாவில் 9 சதவீத மழைப்பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மழைப்பொழிவு இயல்பை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story