இந்தியாவில் நோயைப் பரப்பக்கூடிய சீனாவிலிருந்து புதிய கேட் கியூ வைரஸ் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை


இந்தியாவில் நோயைப் பரப்பக்கூடிய சீனாவிலிருந்து புதிய கேட் கியூ வைரஸ் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Sep 2020 7:19 AM GMT (Updated: 29 Sep 2020 7:19 AM GMT)

கேட் கியூ வைரஸ்? இந்தியாவில் நோயைப் பரப்பக்கூடிய சீனாவிலிருந்து புதிய வைரஸ் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கிறது.

பீஜிங்

நாம் ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி கொண்டிருக்கையில், விஞ்ஞானிகள் சீனாவிலிருந்து வரும் மற்றொரு வைரஸைப் பற்றி எச்சரித்துள்ளனர்.

இந்த வைரஸ் நோய்  கேட் கியூ வைரஸ் (சி.க்யூ.வி) என்று அழைக்கப்படுகிறது, இது சீனாவில் பலருக்குத் தொற்றியுள்ளது மற்றும் இந்தியாவில் காய்ச்சல் நோய்கள், மூளைக்காய்ச்சல் மற்றும் குழந்தை என்செபாலிடிஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று லைவ்மிண்ட் தெரிவித்துள்ளது.

புனேவின்  தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் (என்.ஐ.வி) விஞ்ஞானிகள் 883 மனித சீரம் மாதிரிகளில் இரண்டில் இந்த வைரஸிற்கான ஆன்டிபாடிகளை கண்டுபிடித்ததை அடுத்து இந்த நோய் குறித்து தெரிய வந்துள்ளன. ஒரு வைரஸ் உடலைத் தாக்கும்போது மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் ஆன்டிபாடிகள் உருவாகின்றன.

இதன் பொருள் என்னவென்றால், இந்த இரண்டு நபர்களும் ஒரு கட்டத்தில் கேட் கியூ வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், ஆய்வின் போது எந்தவொரு மனித அல்லது விலங்கு மாதிரிகளிலும் இந்த வைரஸ் கண்டறியப்படவில்லை.

குலெக்ஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்களில், மற்றும் சீனா மற்றும் வியட்நாமில் உள்ள பன்றிகளிலும் ‘கேட் கியூ வைரஸ்’ (சி.க்யூ.வி) இருப்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளிப்படுத்தியது.

இந்தியாவில் குலெக்ஸ் கொசுக்களின் ஒத்த இனங்கள் பரவுவதால், கொசு மாதிரிகளில் இந்த வைரஸின் பிரதி இயக்கவியலைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய கொசுக்கள் (Ae. Aegypti, Cx. Quinquefasciatus and Cx. Tritaeniorhynchus) கேட் கியூ வைரசுக்கு ஆளாகின்றன என்று தரவு காட்டுகிறது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ்கள் பொதுவாக குலெக்ஸ் கொசுக்கள் மற்றும் பன்றிகளால் பரவுகின்றன, மேலும் இது இந்தியாவில் மனிதர்களுக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தக்கூடும்.


Next Story