எல்லையில் அசாதாரண சூழல் தொடர்கிறது: இந்திய விமானப்படை தளபதி


எல்லையில் அசாதாரண சூழல் தொடர்கிறது:  இந்திய விமானப்படை தளபதி
x
தினத்தந்தி 29 Sep 2020 11:24 AM GMT (Updated: 29 Sep 2020 11:24 AM GMT)

எல்லையில் அசாதாரண சூழல் தொடர்வதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

லே,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. 

கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இதனால், சீனாவுடனான எல்லைப் பகுதியில்  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவுகிறது. 

இந்த நிலையில், எல்லையில் எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ எல்லையில் 'போரும் இல்லை, அமைதியும் இல்லை' என்ற நிலையே  நீடிக்கிறது. 

எந்த சம்பவம் நடந்தாலும், அதனை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகள் தயாராக உள்ளன.  எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடன் ஏற்படும் மோதலில் வெற்றி பெறுவதில், விமானப் படை முக்கிய பங்கு வகிக்கும்” என்றார். 


Next Story