தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 48 deaths and 3,227 fresh positive cases reported in Delhi, in the last 24 hours. Delhi Health Department

டெல்லியில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கடந்த மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,76,325 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 48 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,320 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இன்று 2,778 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,43,481 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 27,524 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று மேலும் 4,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்று 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று புதிதாக 5,482 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லி, குஜராத் உள்பட 4 மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு - கொரோனா பரிசோதனை
டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
4. டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம் தகவல்
டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் குளிர் !
இந்த நவம்பர் மாதத்தின் நேற்றைய தினம், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத நவம்பர் மாத குளிரை பதிவு செய்துள்ளது.