மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது
x
தினத்தந்தி 29 Sep 2020 3:28 PM GMT (Updated: 29 Sep 2020 3:28 PM GMT)

மராட்டியத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா ரைவஸ் புரட்டி போட்டு உள்ளது. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சங்களை தொட்டு வந்தது. பல நாட்கள் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி இருந்தது.

இந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று மாநிலத்தில் வைரஸ் நோய் பாதிப்பு சற்று குறைந்து உள்ளது. இதில் மாநிலத்தில் இன்று புதிதாக 14 ஆயிரத்து 976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 66 ஆயிரத்து 129 ஆக உயர்ந்து உள்ளது.

இன்று ஒரேநாளில் மட்டும் 19 ஆயிரத்து 212 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 69 ஆயிரத்து 159 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 363 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 430 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் 36 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்து உள்ளனர். 

Next Story