தேசிய செய்திகள்

டெல்லி மாணவி நிர்பயா போல்; நாட்டை உலுக்கும் ஹத்ரஸ் பாலியல் வன்முறை சம்பவம் + "||" + Hathras gang-rape: UP cops forcibly cremate victim's body, family 'thrashed' for resisting hurried cremation

டெல்லி மாணவி நிர்பயா போல்; நாட்டை உலுக்கும் ஹத்ரஸ் பாலியல் வன்முறை சம்பவம்

டெல்லி மாணவி நிர்பயா போல்; நாட்டை உலுக்கும் ஹத்ரஸ் பாலியல் வன்முறை சம்பவம்
டெல்லி மாணவி நிர்பயா போல்; நாட்டை உலுக்கும் ஹத்ரஸ் பாலியல் வன்முறை சம்பவம் நீதிகேட்டு பெருகும் ஆதரவு
புதுடெல்லி

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த 19 வயது இளம்பெண்,  கடந்த 14ம் தேதி தனது தாயுடன் வயலுக்கு சென்றார். பின்னர், திடீரென காணாமல் போனார். பிறகு, உடலில் கடுமையான காயங்களுடன், நாக்கு துண்டிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கழுத்தை நெரித்தும் கொலை செய்வதற்கு முயன்றுள்ளது. மேலும், பலாத்காரத்தின் போது அப்பெண்ணின் நாக்கையும் அந்த கொடூரன்கள் கடித்து கடுமையாக சேதப்படுத்தி விட்டனர். 

அந்த பெண். அலிகார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை மோசமானதால், கடந்த திங்களன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். 

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் 2 கால்களும் செயல் இழந்து விட்டன. கைகள் பாதியளவு முடங்கி விட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது. அவரை காப்பாற்ற முடியவில்லை,’ என்றனர். இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும் உத்தரபிரதேச போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அதிகாலை 2.30 மணிக்கு அவரது உடலை எரித்து உள்ளனர். இளம் பென்ணின் குடும்பத்தினரையும், உறவினர்களையும்  வீடுகளில் பூட்டி வைத்து உள்ளனர். 

இந்த பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.  

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.

ஆனால்  ஹத்ரஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி 19 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என கூறி உள்ளார்.

"செப்டம்பர் 22 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர் மேலும் மூன்று நபர்கள் பெயரை கூறினார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மோர்டியா கூறி உள்ளார்.

ஒட்டுமொத்த தேசத்தின் ஆன்மாவௌஉலுக்கிய இந்த கொடூர சம்பவம், 2012ம் ஆண்டு டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நிகழ்ந்ததை போன்றது. டெல்லி மாணவி நிரபயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர். இதே போன்று ஹத்ராஸ் இளம்பெண் கொலை வழக்கின் குற்றவாளிகளையும் தூக்கிலிட வேண்டும் என்பதை ஒட்டுமொத்த தேச மக்களின் கோரிக்கையாக எழுந்து உள்ளது. இது தொடர்பாக சமூவலைத்தளங்களில் தங்கள் ஆதங்களை பதிவிட்டு வருகின்றனர்.

#JusticeForManishaValmiki #hangtherapist #RIPManishaValmiki உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளில் மக்கள் தங்களது ஆதங்களை பதிவிட்டு வருகின்றனர்.