கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு


கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 1:10 PM GMT (Updated: 30 Sep 2020 1:10 PM GMT)

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றாததே தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் என்று அம்மாநில சுகாதாரத்துறை குற்றம் சாட்டி வருகிறது. 

இந்த நிலையில், கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 8,830 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று பாதிப்பு பதிவானவர்களில் 58 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 164  பேர் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்கள் , 7695-தொடர்புகள் மூலம் தொற்று பாதித்தவர்கள் என்று  கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

அதேபோல் தொற்று பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,056-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story