ஜம்மு காஷ்மீரில் மேலும் 975 பேருக்கு கொரோனா


ஜம்மு காஷ்மீரில் மேலும்  975 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Sep 2020 1:56 PM GMT (Updated: 30 Sep 2020 1:56 PM GMT)

ஜம்மு காஷ்மீரில் மேலும் 975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் மேலும் 975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 1,355-பேர் இன்று கொரோனா தொற்று பாதிப்பில் குணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் 75 ஆயிரத்து 070-பேராக உயர்ந்துள்ளது.  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 56,872- ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால்  அங்கு  இதுவரை 1,181 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 17,017 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story