‘நான் நலமுடன் இருக்கிறேன்’ வாழ்த்திய அனைவருக்கும் நன்றி - வெங்கையா நாயுடு டுவிட்டர் பதிவு
நான் நலமுடன் இருக்கிறேன் நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
புதுடெல்லி,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார். வெங்கையா நாயுடு குணமடைய மாநில முதல்-மந்திரிகள், மந்திரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நான் நலமுடன் இருக்கிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி. டாக்டர்களின் அறிவுரைப்படி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story