மாஸ்கோ உடன்பாட்டை அமல்படுத்துவது பற்றி இந்தியா-சீனா மீண்டும் பேச்சுவார்த்தை
மாஸ்கோவில் ஏற்பட்ட உடன்பாட்டை அமல்படுத்துவது பற்றி இந்தியாவும், சீனாவும் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தின.
புதுடெல்லி,
கிழக்கு லடாக் பகுதியில், கடந்த மே மாதத்தில் இருந்து இந்திய-சீன படைகள் இடையே முட்டலும், மோதலும் நடந்து வருகிறது. பதற்றத்தை தணிக்க பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கடந்த மாதம் 10-ந் தேதி, ரஷிய தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டின் பின்னணியில், இந்திய-சீன வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், 5 அம்ச உடன்பாடு எட்டப்பட்டது. படைகளை விரைவாக விலக்கிக் கொள்வது, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களை தவிர்ப்பது, எல்லை பிரச்சினை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கடைப்பிடிப்பது, எல்லை கோடு பகுதியில் அமைதியை பராமரிப்பது உள்ளிட்டவைதான் அந்த 5 அம்சங்கள் ஆகும். இந்த 5 அம்ச உடன்பாட்டை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து இந்தியா-சீனா இடையே ராஜ்யரீதியிலான புதிய சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இது, காணொலி காட்சி மூலம் நடந்தது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:-
இது, எல்லை பிரச்சினை தொடர்பான 19-வது கூட்டமாகும். 5 அம்ச உடன்பாட்டை அமல்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எல்லை கோட்டை ஏற்பது தொடர்பாக இருவித கருத்துகளுடன் சமீபத்தில் இந்தியா-சீனா இடையே வார்த்தை மோதல் நடந்தநிலையில், இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

Related Tags :
Next Story