குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட அனைவரும் விடுதலை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அத்வானி உள்பட அனைவரையும் விடுதலை செய்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்புகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதியை 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி கரசேவகர்கள் இடித்து தள்ளியது, பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங், வினய் கட்டியார், சாக்ஷி மகராஜ் உள்ளிட்ட 49 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அத்வானி உள்ளிட்டோரை விடுவித்து, 2001-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு உறுதி செய்தது.
ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்ததன் பேரில், அத்வானி உள்ளிட்டோர் மீது மீண்டும் வழக்கு விசாரணையை நடத்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கு விசாரணையை, லக்னோவில் உள்ள அயோத்தி விவகாரங்களுக்கான சி.பி.ஐ. தனிக்கோர்ட்டுக்கு மாற்றி தினசரி விசாரணை நடத்தி, விரைவாக வழக்கில் தீர்ப்பு வழங்குமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்தல், குறுக்கு விசாரணை நடத்துதல் ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் 17-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியது. பின்னர் ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்குமாறு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என்று லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதையும் சுப்ரீம்கோர்ட்டு வழங்கியது; விசாரணையை விரைவாக முடித்து செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. குற்றம்சுமத்தப்பட்ட 49 பேரில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், பா.ஜ.க. மூத்த தலைவர் விஜயராஜே சிந்தியா உள்ளிட்ட 17 பேர் வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருந்தபோது உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் 351 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 600 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 16-ந்தேதியன்று இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு 30-ந்தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் தீர்ப்புக்காக லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு வளாகத்தில் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோர்ட்டில், வினய் கட்டியார், தரம்தாஸ், வேதாந்தி, லாலு சிங், சம்பத் ராய், பவன் பாண்டே உள்ளிட்ட 26 பேர் நேரில் ஆஜராகினர்.
உமாபாரதியும், கல்யாண் சிங்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. அவர்களும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நிருத்ய கோபால்தாஸ், சதீஷ் பிரதான் ஆகியோரும் காணொலி காட்சி வழியாக ஆஜராகினர்.
அதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.கே.யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலைசெய்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டு செய்த செயல் அல்ல.
* குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் சம்பவம் நடந்த இடத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அவர்களில் யாரும் கூட்டத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இடிக்கப்பட்ட கட்டிடத்தின் கூரையில் ஏறி இடிக்கும் பணியில் சமூக விரோதிகள் ஈடுபட்டபோது, அசோக் சிங்கால் உள்ளே தெய்வங்கள் இருந்ததால் கட்டமைப்பை காப்பாற்ற விரும்பினார். அவர் கவசேவகர்கள் அனைவரையும் கைகளில் தண்ணீரும், பூவும் கொண்டு வருமாறு கேட்டிருக்கிறார். இதனால் அவர்கள் மசூதி இடிப்பில் ஈடுபடவில்லை.
* குற்றம்சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சி.பி.ஐ தாக்கல் செய்யவில்லை.
* மசூதி இடிக்கப்பட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிகழ்த்திய உரை என்று ஆதாரமாக கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்த வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் ஆகியவற்றின் உண்மைத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. தவிரவும் வீடியோ கேசட்டுகள் ‘சீல்’ வைக்கப்படவும் இல்லை, அவை தெளிவாகவும் இல்லை. அவற்றை நம்ப முடியாது. புகைப்படங்களின் ‘நெகட்டிவ்’ கோர்ட்டில் வழங்கப்படவில்லை. வீடியோ கேசட்டுகள் சேதமாகியிருந்தன.
* இந்த வழக்கில் சி.பி.ஐ. ஆஜர்படுத்திய சாட்சியான முன்னாள் போலீஸ் அதிகாரி அஞ்சு குப்தா, தனது வாக்குமூலத்தில், கரசேவகர்களுடன் பல கிரிமினல்களும், கொள்ளையர்களும் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
* சம்பவத்தன்று கரசேவகர்களுடன் பயங்கரவாதிகளும், கிரிமினல்களும் இருப்பார்கள் என்று உளவுப்பிரிவினர் அளித்த அறிக்கை ஆய்வு செய்யப்படவில்லை. தவிரவும், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும், பாபர் மசூதியை இடித்த சமூக விரோதிகளுக்கும் இடையேயான தொடர்பை சி.பி.ஐ. தரப்பு நிரூபிக்க முடியவில்லை.
* குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் 32 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 10 நிமிடங்களில் தீர்ப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரித்த லக்னோ சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி எஸ்.கே. யாதவ், தீர்ப்பு வழங்குவதற்காக நண்பகல் 12.10 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார்.
அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அவர் தனது இருக்கையில் அமர்ந்த உடனேயே இந்த வழக்கு தீர்ப்பின் முக்கிய செயல்பாட்டு பகுதியை வாசிக்க தொடங்கினார்.
அவர் கூறிய முதல் கருத்து, பாபர் மசூதி இடிப்பு, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கை அல்ல என்பதாகும்.
அதைக் கேட்ட உடனேயே குற்றம் சுமத்தப்பட்டு, தீர்ப்புக்காக நேரில் ஆஜராகி இருந்த 26 பேரும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என உணர்ந்து நிம்மதி அடைந்தனர்.
குற்றம்சுமத்தப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்யும் தீர்ப்பை 10 நிமிடங்களில் நீதிபதி வாசித்து முடித்து விட்டார்.
28 ஆண்டுகள் நீண்ட ஒரு முக்கிய வழக்கில், 10 நிமிடங்களில் நீதிபதி தீர்ப்பை அளித்தது அனைவரையும் வியக்க வைத்தது.
இந்த தீர்ப்பு 2,300 பக்கங்கள் கொண்டது என்றாலும், செயல்பாட்டு பகுதி என்பது 3 பக்கங்களை கொண்டதுதான்.
இந்த தீர்ப்பை அளித்ததைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.கே.யாதவ் ஓய்வு பெற்றார். அவர் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடா? சி.பி.ஐ. பதில்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ தனிக்கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
“இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு செய்யுமா?” என சி.பி.ஐ. வக்கீல் லலித் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “இந்த தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு, அது சி.பி.ஐ. தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அது சட்டத்துறையால் ஆய்வு செய்யப்படும். அதன் ஆலோசனையின் பேரில் மேல்முறையீடு செய்வது பற்றி முடிவு எடுக்கப்படும்” என பதில் அளித்தார்.

Related Tags :
Next Story