மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு


மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2020 6:58 AM IST (Updated: 1 Oct 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் சுந்தரவனத்துறை மந்திரியாக இருப்பவர் மந்துரம் பக்கிரா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நல குறைவாக காக்டிவிப் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து பலியாகட்டா ஐ.டி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல வங்காள நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சோகம் சக்ரபோர்த்திக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளார்.

அந்த மாநிலத்தில் ஏற்கனவே போக்குவரத்து துறை மந்திரி சுவேந் அதிகாரி, தீ மற்றும் அவசர சேவைகள் பிரிவு மந்திரி சுஜித் போஸ், உணவுத்துறை மந்திரி ஜியோதிப்பிரியோ முல்லிக் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story