உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல், பிரியங்கா விடுதலை
உத்தரபிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்கா விடுதலை செய்யப்பட்டனர்.
நொய்டா,
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அவர்களை நொய்டா அருகே உத்தரபிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் தடையை மீறி ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் ஹத்ராஸ் நோக்கி நடந்தே செல்ல முயன்றனர். எனவே இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கைது செய்யப்பட்ட ராகுல் மற்றும் பிரியங்காவை அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரம் வைத்திருந்த அவர்கள், பின்னர் இருவரையும் விடுவித்தனர்.
இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியும், பிரியங்காவும் டெல்லிக்கே திரும்பி சென்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக உத்தரபிரதேச போலீசாரும் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story