மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை


மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2020 7:48 AM IST (Updated: 2 Oct 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லி,

இந்திய விடுதலைக்கு  வித்திட்ட , இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் நடத்திய  தேசப்பிதா  காந்தியின்  151-வது பிறந்த நாள் இன்று. இதையொட்டி நாடு முழுவதும் காந்திக்கு   மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.  டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,”  மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்களிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  நேசத்திற்குரிய மகாத்மா காந்திக்கு நாம் தலைவணங்குவோம். காந்தியின் கொள்கைகள்   செழுமையான மற்றும் இரக்க குணமுள்ள  இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story