உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் ; ராகுல் காந்தி டுவிட்


உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் ; ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 2 Oct 2020 8:14 AM IST (Updated: 2 Oct 2020 8:14 AM IST)
t-max-icont-min-icon

உலகில் நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் என காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினமான இன்று, அவருக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

“ உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன் .  பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story