லடாக் எல்லையில் கல்வானில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னம்


லடாக் எல்லையில் கல்வானில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னம்
x
தினத்தந்தி 3 Oct 2020 3:08 PM IST (Updated: 3 Oct 2020 3:08 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கில் சீனாவின் அத்துமீறலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு போர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

லடாக்,

லடாக் எல்லையில் கல்வானில் சீன படையினருடன் ஜூன் மாதம் நேரிட்ட மோதலில் வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

>ஜூன் மாதம் 15ம் தேதி அத்துமீறி ஊடுருவி தங்கிய சீன படையினரை இந்திய வீரர்கள் அப்புறபடுத்தியபோது கைகலப்பு நேரிட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணமடைந்த நிலையில், சீன தரப்பில் சுமார் 43 பேர் பலி மற்றும் காயமடைந்திருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் 20 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் , லடாக்கின் டர்பக்-சியோக்-தெளலத் பெக் ஓல்டி பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு கால்வன் மோதலில் உயிரிழந்த 20 வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஜூன் 15ம் தேதி நடந்த சம்பவம் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story