பீகார் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் போட்டியிடும் 70 தொகுதிகளை அறிவித்தார் - தேஜஸ்வி யாதவ்


பீகார் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் போட்டியிடும் 70 தொகுதிகளை அறிவித்தார் - தேஜஸ்வி யாதவ்
x
தினத்தந்தி 3 Oct 2020 1:48 PM GMT (Updated: 3 Oct 2020 1:48 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும் என ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.

பாட்னா,

243 இடங்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகளில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு 70 இடங்களை வழங்க அந்த கட்சி முன்வந்துள்ளது. இன்று தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடும். சிபிஐ எம்எல் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிடும். காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிடும். ராஷ்ட்ரீய ஜனதாதளம் 144 இடங்களில் போட்டியிடும். அதேசமயம் வால்மீகி நகர் மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story