வாரணாசியில் மத்திய மந்திரி காரை மறித்து காங்கிரசார் போராட்டம்


வாரணாசியில் மத்திய மந்திரி காரை மறித்து காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2020 4:29 AM IST (Updated: 4 Oct 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

வாரணாசியில் மத்திய மந்திரி காரை மறித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கேட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே வாரணாசியில் நடந்த விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய மந்திரி ஸமிரிதிஇரானி நேற்று வந்திருந்தார். அப்போது, போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது மக்களின் நன்மைக்காக அல்ல, அரசியலுக்காக என்று தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாரணாசியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி சென்ற காரை வழிமறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story