அரசாங்கம் வாளை ஏந்தி நின்றாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது- உ.பி எம்.எல்.ஏ பேச்சு


அரசாங்கம்  வாளை ஏந்தி நின்றாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது- உ.பி எம்.எல்.ஏ பேச்சு
x
தினத்தந்தி 4 Oct 2020 9:44 AM IST (Updated: 4 Oct 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளுக்கு கலச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுப்பதால் பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும் என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

லக்னோ,

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுப்பதால் பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும் என உத்தரபிரதேச பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

 உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச்செயல்களை தடுக்க முடியாது.

 பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும்.அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செயல்பட முடியும். 

ஒரு அரசு எப்படி அதன் மக்களை காக்க வேண்டுமோ அதைப்போல பெற்றோர்களும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரம், நல்ல பண்புகளுடன் சேர்த்து அடக்கமாகவும் பேச வேண்டும் என தெரிவித்தார். 


Next Story