கொரோனா சமூக பரவலாகிவிட்டது - மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி
எனது வீட்டில் பணியாற்றியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது வீட்டில் எனக்கு நேற்று தேநீர் வழங்கிய பையனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று எனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. ஆனாலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலையை எட்டி விட்டதை காட்டுகிறது. கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலும் நம்மால் கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை” என்றார்.
Related Tags :
Next Story