ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு - ஹர்ஷ்வர்தன் தகவல்
ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஜூலை 2021க்குள் சுமார் 25 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் தயாரானவுடன் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும்.
தடுப்பூசியின் அனைத்து அம்சங்களையும் ஆராய உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசியை எவ்வாறு உறுதி செய்வது என்பது தான் எங்களின் முன்னுரிமை ஆகும் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :
Next Story