தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது; அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்


தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது; அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்
x
தினத்தந்தி 5 Oct 2020 1:57 AM IST (Updated: 5 Oct 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக வட்டமேஜை கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் அசுத்தோஷ் சர்மா பேசினார். அப்போது அவர் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் முக்கியமான கட்ட பரிசோதனைகளில் இருப்பதாகவும், உலக மனித குலத்தின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அறிவியல் தொழில்நுட்பத்துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்கு இந்தியா அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கிறது. அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உலகின் 40-க்கு மேற்பட்ட நாடுகளுடன் உள்ளது’ என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story