வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்


வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்: யோகி ஆதித்யநாத்
x
தினத்தந்தி 5 Oct 2020 10:41 AM IST (Updated: 5 Oct 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இனக் கலவரங்களையும், வகுப்புவாதக் கலவரங்களையும் தூண்டிவிடுகிறார்கள். எந்த மிகப்பெரிய பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உத்தர பிரதேச  முதல்வர் யோகி ஆதித்யநாத்  தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான், இனவாத, வகுப்பு வாத கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்கள். 

இந்தக் கலவரத்தின் மூலம் அரசியல்ரீதியான ஆதாயங்களை, வாய்ப்புகளைப் பெற முயல்கிறார்கள். தொடர்ந்து சதி செய்து வருகிறார்கள்.மிகப்பெரிய பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம். மாநிலத்தில் பெண்களின் பாதுப்பை உறுதி செய்வதில் இந்த அரசு கடமைப்பட்டுள்ளது” எனப்பதிவிட்டுள்ளார்.

Next Story