பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா? ராகுல்காந்தி கொதிப்பு


பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் பெண்களுக்கே அறிவுரை சொல்வார்களா? ராகுல்காந்தி கொதிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2020 9:03 AM GMT (Updated: 5 Oct 2020 9:03 AM GMT)

'மகள்களுக்கு பெற்றோர்கள் நல்ல பண்புகள் மற்றும் கலாசாரத்தை சொல்லி தந்து வளர்த்தால் தான் பலாத்காரம் தடுக்கப்படும்' என பாஜக எம்.எல்.ஏ., கூறிய கருத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உ.பி., மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. செப்., 14ல் ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், செப்., 29ல் உயிரிழந்தார்.

இந்தநிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பல்யா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இவரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டபோது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். நல்லது சொல்லி வளர்ப்பது மட்டுமே இந்த விவகாரத்தில் உதவும். உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து வளருங்கள் என்று கூறினார்.

இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவில், இது பாஜகவை வழிநடத்துகிற ஆர்.எஸ்.எஸ்., ஆணாதிக்க மனநிலை இது. ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு நல்ல பண்புகள் கற்பிக்க வேண்டுமா?' எனப் பதிவிட்டுள்ளார்.

Next Story