காதல்விவகாரம்: உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவரை நிர்வாணமாக்கி தாக்கிய 10ம் வகுப்பு மாணவர்கள்


காதல்விவகாரம்: உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவரை நிர்வாணமாக்கி தாக்கிய 10ம் வகுப்பு மாணவர்கள்
x
தினத்தந்தி 5 Oct 2020 3:40 PM IST (Updated: 5 Oct 2020 3:40 PM IST)
t-max-icont-min-icon

காதல் விவகாரத்தில் உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவரை நிர்வாணமாக்கி 10ம் வகுப்பு மாணவர்கள் தாக்கி உள்ளனர்.

காசியாபாத்

உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். 17 வயதான அந்த மாணவர்  மாணவியை சந்திக்க  தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார். ஒரு தனிமையான இடத்தில் இருவரும் சந்திக்க முடிவு செய்து இருந்தனர்.

சிறுமியுடன் பேச சிறுவன் காரில் இருந்து வெளியே வந்தவுடன். அங்கு பதுங்கி இருந்த மாணவியின் யுடன் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்  சிலர்12 ம் வகுப்பு மாணவரை தாக்க தொடங்கினர். அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் தாக்கப்பட்டனர்.

பின்னர் 10ம் வகுப்பு மாணவர்கள் 12 ஆம் வகுப்பு மாணவனை  காரில் உட்காரும்படி கட்டாயப்படுத்தி அவரை ஒரு காட்டுக்கு கொண்டு சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மாணவனின் வாயில் ஒரு துணியை அடைத்து, அவரது சில புகைப்படங்களை அவரது மொபைல் போனுக்கு மாற்றினர். பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து சமூக ஊடக கணக்குகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயலிழக்கச் செய்தனர்.

பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவனை நிர்வாணமாக்கி அடித்து உதைத்தனர்.  அவர்களிடம் இருந்து தப்பிய   போலீசில் புகார் கூறி உள்ளார்.
 
காவல்துறையினர் முன் அவர் அளித்த புகாரில், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தாக்குதலின் வீடியோவைப் பதிவுசெய்ததாகவும், அவர் பள்ளியின் சிறுமியுடன் உறவு கொண்டிருந்ததாக ஒப்புக் கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


Next Story