ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாகச் செலுத்தும் டார்பிடோ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை


ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாகச் செலுத்தும் டார்பிடோ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
x
தினத்தந்தி 5 Oct 2020 12:14 PM GMT (Updated: 5 Oct 2020 12:14 PM GMT)

டார்பிடோ ஏவுகணையை ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாகச் செலுத்தும் அமைப்பைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.

புவனேஸ்வர்

நீர்முழ்கி கப்பலை தாக்கும் இலகுரக ஏவுகணையான டார்பிடோ வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோ ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது.  

ஒலியின் வேகத்தைவிட அதிவிரைவாக இலகுவகை டார்பிடோ ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.

இந்தக் கருவியைக் கொண்டு ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று ஏவுகணையைச் செலுத்தி வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் இது குறிப்பிடத் தக்க முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இதற்காகப் பாடுபட்ட குழுவினரைப் பாராட்டியுள்ளார்


Next Story