வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-உ.பி. அரசு


வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது-உ.பி. அரசு
x
தினத்தந்தி 6 Oct 2020 12:15 PM IST (Updated: 6 Oct 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது என உத்தர பிரதேச அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான ஒரு தலித் இளம்பெண், சமீபத்தில் உயர்சாதி வாலிபர்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டார். அவரது உடலையும் போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பாலியல் வன்கொடுமை  மற்றும் கொலை சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் நடத்தி வரும் போராட்டத்தால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமும், பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, உத்தர பிரதேச அரசு தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படது. அதில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என ஏற்கனவே நாங்கள் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளோம்.   வன்முறை சம்பவங்களை தடுக்கவே பெண்ணின் உடல் அதிகாலை எரிக்கப்பட்டது. பெற்றோர் சம்மதம் பெற்றே அதிகாலை பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story