பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- அமைச்சர் செங்கோட்டையன்


பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- அமைச்சர் செங்கோட்டையன்
x
தினத்தந்தி 6 Oct 2020 12:48 PM IST (Updated: 6 Oct 2020 12:48 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகள் திறப்பை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்- என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  பள்ளி, கல்லூரிகள் திறக்கும் விவகாரத்தில் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களே இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- “
பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தான் முடிவு எடுப்பார்.. பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம். 8 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை உள்ளாட்சித் துறை உதவியுடன் தயார்படுத்தி வருகிறோம்” என்றார்.


Next Story