தேசிய செய்திகள்

கர்நாடகாவில் மேலும் 9,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + A further 9,993 people in Karnataka have been diagnosed with corona infection

கர்நாடகாவில் மேலும் 9,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் மேலும் 9,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 9,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு முதலில் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கர்நாடகாவில் மேலும் 9,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,57,705 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,461 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10,228 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,33,074 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,15,151 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 848 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,09,650 ஆக அதிகரித்துள்ளது.
2. கர்நாடகத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இன்று கொரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
4. போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணி நீக்கம் - கர்நாடக அரசு அதிரடி நடவடிக்கை
கர்நாடகத்தில் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 334 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
5. கர்நாடகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று பதிவாகியுள்ளது.