அனைத்து விதமான முககவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை


அனைத்து விதமான முககவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2020 6:50 AM IST (Updated: 7 Oct 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து விதமான முககவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முககவசம், கவச உடைகளின் தேவை அதிகரித்ததால், என்-95 உள்ளிட்ட முககவசம், கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதால் அனைத்து விதமான முககவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கியது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக ஜெனரல் அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். மேற்படி முககவசங்கள் மற்றும் கவச உடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கு அனுமதிக்கப்படுகிறது என அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும்.

இந்த நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் தளத்தில், ‘உலகிற்காக இந்தியா உருவாக்குகிறது: என்-95 மற்றும் எப்.எப்.பி.2 முககவசங்கள் தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story