கர்நாடகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை - மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
குடகு மாவட்டத்திற்கு நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் சென்றார். அவர் மடிகேரியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் குடகு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பும், வழிகாட்டுதல்களும் விரைவில் அரசு சார்பில் வெளியிடப்படும். கர்நாடகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் மற்றும் சுகாதார துறையினர் கண்டறிந்து கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக கர்நாடகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பது குறித்து அரசு முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story