இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து


இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 8 Oct 2020 3:46 AM GMT (Updated: 8 Oct 2020 3:46 AM GMT)

இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு, விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவரது டுவிட்டர்  பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பேரழிவுகளின் போது மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story