தேசிய செய்திகள்

கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை மே மாதம்-50 ஆயிரம், அக்டோபர்-57 லட்சம் + "||" + Corona; The number of survivors was 50,000 in May and 57 lakh in October

கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை மே மாதம்-50 ஆயிரம், அக்டோபர்-57 லட்சம்

கொரோனா; குணமடைந்தோர் எண்ணிக்கை மே மாதம்-50 ஆயிரம், அக்டோபர்-57 லட்சம்
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த மே மாதம் 50 ஆயிரத்தில் இருந்து அக்டோபரில் 57 லட்சம் என்ற அளவிற்கு பன்மடங்காக உயர்ந்து உள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.  இதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியொன்றில், இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரம் என்ற அளவில் இருந்தது.

எனினும், இந்த எண்ணிக்கை அக்டோபரில் 57 லட்சம் என்ற அளவிற்கு பன்மடங்காக உயர்ந்து உள்ளது.  நாளொன்றுக்கு 75 ஆயிரம் பேர் குணமடைந்து வருகின்றனர்.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட இது 6.3 மடங்கு அதிகம் ஆகும் என்று தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  மொத்தம் 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்வு
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
2. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்வு 440 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டு, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
3. பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
4. இந்திய ராணுவம் பதிலடி; பாகிஸ்தானிய வீரர்கள் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் பலியான பாகிஸ்தானிய வீரர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. துருக்கி நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு
துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்து உள்ளது.