தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் - ரகுராம் ராஜன் + "||" + Government needs to increase spending to recover from corona impact - Raghuram Rajan

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் - ரகுராம் ராஜன்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் - ரகுராம் ராஜன்
இந்தியா போன்ற வளரும் நாடுகள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் ஜி-20 மாநாட்டில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரணமாக சிறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மட்டுப்படுத்த, உடனடியான நிவாரண உதவிகள் அளிக்க மத்திய அரசு பெரிய அளவில் செலவு செய்யத் தயங்கக் கூடாது என்று யோசனை தெரிவித்துள்ளார். 


மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர, அரசின் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இதற்கிடையே பி.ஹெச்.டி. வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் பிரதான பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால், உரிய நேரத்தில் ஒரு நிதித் தொகுப்பு மூலம் அரசு செலவு செய்யும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு
தூத்துக்குடியில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை-தென்காசியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு
தூத்துக்குடியில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை-தென்காசியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. டெல்டாவில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி 170 பேருக்கு தொற்று
டெல்டாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
5. பெரம்பலூர், அரியலூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 125 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர்.