இந்தியா அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% சரிவை சந்திக்கும் - உலக வங்கி


இந்தியா அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  9.2% சரிவை சந்திக்கும் - உலக வங்கி
x
தினத்தந்தி 8 Oct 2020 9:08 AM GMT (Updated: 8 Oct 2020 9:08 AM GMT)

இந்தியாவில் அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியி ல் கூர்மையான சரிவு ஏற்படும் என உலக வங்கி கணித்துள்ளது அது முன்பு கணிக்கபட்ட 3.2 சதவீதத்தை விட 9.2 சதவீதமாக அதிகமாக இருக்கும்.

புதுடெல்லி: 

கொரோனா தொற்றால்  பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மற்றும் செங்குத்தான தாக்கத்தை சீரமைக்க இந்தியா முக்கியமான சீர்திருத்தங்களைத் தொடர வேண்டும் என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு பிராந்தியமாக தெற்காசியா கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுதோறும் 6 சதவீதமாக முதலிடம் பிடித்தது,, 2020 ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாக அது  சுருங்கி மிக மோசமான மந்தநிலை சரிவு ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்தியத்தின் மிகப்பெரிய நாடான இந்திய பொருளாதாரம் 2021 மார்ச்சில் தொடங்கிய நிதியாண்டில் 9.6 சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி நிதியாண்டில் 5.4 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி இந்தியாவில் 2021 ஆம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூர்மையான சரிவு ஏற்படும் என கணித்து உள்ளது. 9.6 சதவீதம் சுருக்கத்தை கணித்துள்ளது, இது ஜூன் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 3.2% ஐ விட செங்குத்தானது ஆகும்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலவீனமான செயல்பாடு இந்திய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டையும் குறைக்கும்.

உலக வங்கி மதிப்பீட்டின்படி, வளர்ச்சி 2022 நிதி ஆண்டில் 5.4% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என  கருதுகிறது, ஆனால் பெரும்பாலும் அடிப்படை விளைவுகளை பிரதிபலிக்கிறது.

தெற்காசியாவின் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் கூறுகையில், “இந்தியாவில் நிலைமை நாம் முன்பு கண்டதை விட மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய பொருளாதாரம் மந்தமடைந்து, நிதித்துறை பலவீனம் அதிகரிக்கும் போது கொரோனா தாக்கியதாக உலக வங்கி தெரிவித்துள்ளது, இருப்பினும், ஒரு “விரைவான மற்றும் விரிவான” நடவடிக்கை, வறுமைக்கு எதிராக கடுமையாக போராடி வென்று  வெற்றிகளைப் பாதுகாக்க நாட்டிற்கு உதவும் என கூறினார்



Next Story