குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளை பாகிஸ்தான் தீர்க்க வேண்டும் - மத்திய அரசு வலியுறுத்தல்


குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளை பாகிஸ்தான் தீர்க்க வேண்டும் - மத்திய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Oct 2020 6:21 AM IST (Updated: 9 Oct 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளை பாகிஸ்தான் தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்தாக கூறி கைது செய்யப்பட்டு ராணுவ கோர்ட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த உத்தரவை மறுஆய்வு செய்யுமாறும், ஜாதவுக்கு தூதரக வழிமுறைகளை வழங்குமாறும் சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மறுஆய்வு வழக்கு நடந்து வருகிறது.

இந்த வழக்கில் ஜாதவுக்காக வாதாட வக்கீலை நியமிக்குமாறு பாகிஸ்தான் கூறி வருகிறது. எனவே ஜாதவுக்காக இந்திய வக்கீலை நியமிக்க அனுமதிக்குமாறும், தூதரக வழிமுறைகளை அவருக்கு வழங்குமாறும் இந்தியா கேட்டுக்கொண்டு வருகிறது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க பாகிஸ்தான் தவறிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்குதல், தடையற்ற, நிபந்தனையற்ற தூதரக அணுகலை வழங்குதல் போன்றவையே முக்கிய பிரச்சினை என்று கூறிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, சர்வதேச கோர்ட்டு உத்தரவுப்படி திறம்பட மறுஆய்வு செய்ய வேண்டுமானால் இந்த முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

Next Story