கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமின் - ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு


கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமின் - ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2020 3:39 PM IST (Updated: 9 Oct 2020 3:39 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்திற்கு ஜாமின் வழங்கி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஞ்சி,

பீஹார் மாநிலத்தில் கடந்த 1992-93ல் லாலு பிரசாத் முதல்வராக இருந்த போது, சாய்பாஸா கருவூலத்தில் இருந்து ரூ.33.67 கோடி முறைகேடாக எடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஜாமன் வழங்க கோரி மனு செய்திருந்தார். இந்த வழக்கில் லாலு பிரசாத்திற்கு  ஜாமின் வழங்கி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில் லாலு முதல்வராக இருந்த போது, தும்கா கருவூலத்தில் இருந்து 3.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால், அவர் தற்போது விடுதலையாக முடியாது. கால்நடை தீவன வழக்கு தொடர்பாக 3 வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத், ஜார்க்கண்டில் உள்ள, பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

உடல் நலக்குறைவு காரணமாக, அங்குள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக, மருத்துவமனையில் இருக்கும் அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மருத்துவமனை இயக்குனரின் பங்களாவுக்கு, சமீபத்தில் மாற்றப்பட்டார். அங்கிருந்தபடியே பீஹார் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story