ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு


ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த  நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 9 Oct 2020 3:51 PM IST (Updated: 9 Oct 2020 3:51 PM IST)
t-max-icont-min-icon

ராம்விலாஸ் பாஸ்வான் கவனித்து வந்த நுகர்வோர் துறை பொறுப்பு பியூஸ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று காலமானார்.

 இந்தநிலையில் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவையடுத்து அவர் கவனித்து வந்த மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை தற்காலிகமாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story