தேசிய செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு + "||" + AAP to not contest Bihar polls, cites flood, Covid-19 situation

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி  கட்சி அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் அக்டோபர்  28 தொடங்கி  நவம்பர் 7 வரை 3 கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. 

மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  நிதீஷ் குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகள் ஆகும்.  

இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்புதல் பெற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பீகார் மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குமார் சிங் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியலில் காலடி எடுத்துவைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்; சென்னை பொதுக்கூட்டத்தில் இன்று அறிவிப்பு வெளியிடுகிறார்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியலில் காலடி எடுத்துவைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முடிவு செய்துள்ளார். அதற்கான அறிவிப்பை சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் வெளியிடுகிறார்.
2. பீகாரில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் சுட்டுக் கொலை
பீகாரின் பாட்னாவில் இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
3. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14-ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார்.
4. தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
5. பீகாரில் விவசாயிகள் பேரணியில் போலீசார் தடியடி; பலர் படுகாயம்
3 வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் கடந்த சில வாரங்களாக நீடித்து வருகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை