மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு


மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 10 Oct 2020 1:28 AM GMT (Updated: 10 Oct 2020 1:28 AM GMT)

மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சாம்பை,

மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதன்படி, இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவானது.  இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் நேற்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவானது.

இதன்பின்பு அருணாசல பிரதேசத்தின் தவாங் நகரில் நேற்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை வடகிழக்கே அமைந்த மிசோரமில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story