தேசிய செய்திகள்

ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி + "||" + Success of heart surgery for elderly liver donor for first time in Asia

ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி

ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி
ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கிய முதியவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது.
ஐதராபாத்,

மராட்டியத்தில் வசித்து வரும் முதியவர் சையது இஷாக் (வயது 71).  கடந்த 1998ம் ஆண்டு தனது சகோதரருக்கு தனது கல்லீரலின் இடது பக்கத்தில் இருந்து ஒரு பகுதியை தானம் வழங்கியுள்ளார்.  இதனால் ஆசியாவிலேயே முதன்முறையாக கல்லீரல் தானம் வழங்கியவர் என்ற பெருமையை பெற்றார்.

இதன்பின்னர் வழக்கம்போல் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்துள்ளார்.  சையது இஷாக் கல்லீரல் தானம் வழங்கிய பின்னர், அவருக்கு கொலஸ்டிரால் அளவு அதிகரித்து உள்ளது.  பின்பு இருதய பாதிப்புக்காக கடந்த 2000ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.

இதுபோன்று அடுத்தடுத்து 2005 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளிலும் ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டன.  இதனால் அவரது உடலில் மொத்தம் 6 ஸ்டென்ட்கள் உள்ளன.  பின்னர் அவர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

இந்நிலையில், இந்த ஆண்டு அவருக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ அறிக்கை வழியே தெரிந்துள்ளது.  அந்த ஸ்டென்ட்கள் அருகே நிறைய அடைப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.  இதனால் அதிக ஆபத்து நிறைந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.  இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  எனினும், மருத்துவர் பிரதீக் தலைமையிலான குழு அவருக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமுடன் செய்து முடித்தது.

இதன்பின்பு 5 முதல் 6 நாட்கள் ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  சையது சிகிச்சை முடிந்து 3 நாட்களுக்குள் நடக்க தொடங்கி விட்டார்.  இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
2. பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
3. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி
கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
4. அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்
அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. ஐ.பி.எல். போட்டி; 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.