இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 73,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 926 பேர் மரணமடைந்து உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 73,272 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்து உள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,93,592ல் இருந்து 8,83,185 ஆக குறைந்து உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 59,06,070ல் இருந்து 59,88,823 ஆக உயர்ந்து உள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 926 பேர் மரணமடைந்து உள்ளனர். இதனால், கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 490ல் இருந்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக உயர்வடைந்து உள்ளது.
Related Tags :
Next Story