உத்தரபிரதேசத்தில் 19-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு
உ.பி.,யில் அரசு வழிகாட்டுதலின்படி, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
லக்னோ,
கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது.
கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. பல்வேறு தளர்வுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது.
ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில், பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்கலாம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புகளையொட்டி, உத்தரபிரதேசத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அக்.,19 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப் முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Tags :
Next Story